சூப்பர் 8: தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி! @icc
விளையாட்டு

சூப்பர் 8: தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி!

இந்தியா - ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா - வங்கதேசம் ஆகிய அணிகள் இன்று விளையாடவுள்ளன.

யோகேஷ் குமார்

ஆட்ட முடிவுகள்

தென்னாப்பிரிக்கா vs அமெரிக்கா

சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்கா 194/4 (டி காக் 74, மார்க்ரம் 46, நெட்ராவால்கர் 2-21) அமெரிக்கா 176/6 (கோஸ் 80, ரபாடா 3-18)

இங்கிலாந்து vs மே.இ. தீவுகள்

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி எளிதில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

மே.இ. தீவுகள் 180/4 (ஜான்சன் சார்லஸ் 38, மொயீன் அலி 1-15) இங்கிலாந்து 181/2 (சால்ட் 87, பேர்ஸ்டோ 48, ரஸ்ஸல் 1-21)

முக்கிய நிகழ்வுகள்

* அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நார்க்கியா ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம், தென்னாப்பிரிக்க அணிக்காக டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டெய்னுடன் (30 விக்கெட்டுகள்) முதலிடத்தில் இணைந்தார் நார்க்கியா.

* காயம் காரணமாக மே.இ. தீவுகள் பேட்டர் பிரண்டன் கிங் இனி வரும் ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

* சூப்பர் 8 சுற்றின் 3 ஆட்டங்களையும் இந்திய அணி வெவ்வேறு மைதானங்களில் விளையாடவுள்ள நிலையில், “எந்த சூழலையும் எதிர்த்து இந்திய அணி சிறப்பாக செயல்படும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.

இன்றைய ஆட்டங்கள்

இந்தியா vs ஆப்கானிஸ்தான் (இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு)

ஆஸ்திரேலியா vs வங்கதேசம் (இந்திய நேரப்படி வெள்ளி காலை 6 மணிக்கு)