ஸ்டெயின் 
விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டெயின் விலகல்!

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் தொடர்ந்து பணியாற்றுவேன்..

யோகேஷ் குமார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேல் ஸ்டெயின் விலகியுள்ளார்.

2022 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக பணியாற்றிய டேல் ஸ்டெயின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். மேலும், எஸ்ஏடி20-யில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெயின் பயிற்சியாளராக பணியாற்றிய சமயத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, இரண்டு முறை (2023,2024 ஆண்டுகளில்) சாம்பியன் பட்டத்தை வென்றது.