ஸ்டார்க் ANI
விளையாட்டு

சீண்டிய ஜெயிஸ்வால்: ஸ்டார்க் தந்த பதிலடி!

ஸ்டார்க் பந்துவீசியபோது, “உங்களின் பந்து மெதுவாக வருகிறது” எனக் கூறி...

யோகேஷ் குமார்

பெர்த் டெஸ்டில் தன்னை வம்புக்கிழுத்த ஜெயிஸ்வாலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

பிஜிடி தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட் ஆன ஜெயிஸ்வால், அடுத்த இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்து அசத்தினார்.

2-வது இன்னிங்ஸில் ஸ்டார்க் பந்துவீசியபோது, “உங்களின் பந்து மெதுவாக வருகிறது” எனக் கூறி ஜெயிஸ்வால் ஸ்டார்கை சீண்டினார்.

இளம் வயதில் ஸ்டார்க்கிடம் இவ்வாறு பேச தனி தைரியம் வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2-வது டெஸ்டின் முதல் பந்தை வீசிய ஸ்டார்க், ஜெயிஸ்வாலை வெளியேற்றினார். கடந்த டெஸ்டில் பந்து மெதுவாக வந்ததாகக் கூறிய ஜெயிஸ்வால், இம்முறை ரன் எதுவும் எடுக்காமல் வேகமாக வெளியேறினார்.