கோப்புப்படம் ANI
விளையாட்டு

இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ஸ்டார்க்! | Australia Squad |

கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை.

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் ஆட்டங்கள் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கு 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரைப் பொறுத்தவரை முதலிரு ஆட்டங்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால், ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக தொடர்கிறார். மார்னஸ் லபுஷேன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேத்யூ ரென்ஷா ஒருநாள் தொடரில் அறிமுகத் தயாராகிறார். இவருடன் மிட்செல் ஓவனும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க், அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோஷ் இங்லிஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார். அலெக்ஸ் கேரி டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. மேலும், ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதால் பெர்த்தில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேமரூன் கிரீன் ஒருநாள் தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குத் தயாராக வேண்டும் என்பதால், டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. முழங்கையில் ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக கிளென் மேக்ஸ்வெல் டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை.

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஓவென், மேத்யூ ஷார்ட், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஸாம்பா, பென் ட்வார்ஷிஸ், மேத்யூ ரென்ஷா, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், கூப்பர் கான்லி

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி (முதலிரு ஆட்டங்கள்)

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஓவென், மேத்யூ ஷார்ட், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஸாம்பா, பென் ட்வார்ஷிஸ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ கூனமென், ஷான் அபாட்.

India tour of Australia | Ind v Aus | India v Australia | Mitchell Starc | Marnus Labuschagne | Mitchell Marsh | Cameron Green | Josh Inglis | ODI Squad | T20I Squad | George Bailey |