ஜெயசூர்யா ANI
விளையாட்டு

இலங்கையின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த கிறிஸ் சில்வர்வுட் சமீபத்தில் அப்பதவியிலிருந்து விலகினார்.

யோகேஷ் குமார்

இலங்கை அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2022 முதல் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த கிறிஸ் சில்வர்வுட்டின் பதவிக்காலம் 2024 டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனது ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க விரும்பாத கிறிஸ் சில்வர்வுட் அப்பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் இலங்கை அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி ஜூலை இறுதியில் இலங்கை சென்று 3 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் பிறகு இலங்கை அணி இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர்களுக்கு ஜெயசூர்யா தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை அணியின் தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த ஜெயசூர்யா சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்பட்டார்.