கோப்புப்படம் ANI
விளையாட்டு

டெஸ்டில் 10,000 ரன்கள்: ஸ்டீவ் ஸ்மித் சாதனை

ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பிறகு, இந்தப் பெருமையை அடையும் நான்காவது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்.

கிழக்கு நியூஸ்

டெஸ்டில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சாதனையை அடையும் நான்காவது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்டர்களின் கனவாக இருப்பது - 10,000 டெஸ்ட் ரன்கள். இந்தச் சாதனையை பிஜிடி தொடரில் சிட்னி டெஸ்டில் ஒரு ரன்னில் தவறவிட்டார் ஸ்டீவ் ஸ்மித். இந்தத் தொடரின் முடிவில் ஸ்மித் 9,999 ரன்களுடன் காத்திருந்தார். இதைத் தொடர்ந்து, இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்தது. பேட் கம்மின்ஸ் இல்லாததால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், முதல் பந்திலேயே தனது முதல் ரன்னை எடுத்து, டெஸ்டில் 10,000 ரன்களை பூர்த்தி செய்தார்.

ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பிறகு, இந்தப் பெருமையை அடையும் நான்காவது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித். இதுவரை 14 பேட்டர்கள் மட்டுமே டெஸ்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளார்கள்.

மேலும், 115-வது டெஸ்டில் விளையாடும் ஸ்மித், 205 இன்னிங்ஸில் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்து இந்த மைல்கல்லை வேகமாக அடைந்த 5-வது வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

டெஸ்டில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த பேட்டர்கள்

சச்சின் டெண்டுல்கர்

  • ஆட்டங்கள் - 200

  • ரன்கள் - 15,921

  • சராசரி - 53.78

  • சதங்கள் - 51

ரிக்கி பாண்டிங்

  • ஆட்டங்கள் - 168

  • ரன்கள் - 13,378

  • சராசரி - 51.85

  • சதங்கள் - 41

ஜேக் காலிஸ்

  • ஆட்டங்கள் - 166

  • ரன்கள் - 13,289

  • சராசரி - 55.37

  • சதங்கள் - 45

ராகுல் டிராவிட்

  • ஆட்டங்கள் - 164

  • ரன்கள் - 13,288

  • சராசரி - 52.31

  • சதங்கள் - 36

ஜோ ரூட்

  • ஆட்டங்கள் - 152

  • ரன்கள் - 12,972

  • சராசரி - 50.87

  • சதங்கள் - 36

அலாஸ்டர் குக்

  • ஆட்டங்கள் - 161

  • ரன்கள் - 12,472

  • சராசரி - 45.35

  • சதங்கள் - 33

குமார் சங்கக்காரா

  • ஆட்டங்கள் - 134

  • ரன்கள் - 12,400

  • சராசரி - 57.40

  • சதங்கள் - 38

பிரையன் லாரா

  • ஆட்டங்கள் - 131

  • ரன்கள் - 11,953

  • சராசரி - 52.88

  • சதங்கள் - 34

ஷிவ்நரைன் சந்தர்பால்

  • ஆட்டங்கள் - 164

  • ரன்கள் - 11,867

  • சராசரி - 51.37

  • சதங்கள் - 30

மஹிலா ஜெயவர்தனே

  • ஆட்டங்கள் - 149

  • ரன்கள் - 11,814

  • சராசரி - 49.84

  • சதங்கள் - 34

ஆலன் பார்டர்

  • ஆட்டங்கள் - 156

  • ரன்கள் - 11,174

  • சராசரி - 50.56

  • சதங்கள் - 27

ஸ்டீவ் வாஹ்

  • ஆட்டங்கள் - 168

  • ரன்கள் - 10,927

  • சராசரி - 51.06

  • சதங்கள் - 32

சுனில் காவஸ்கர்

  • ஆட்டங்கள் - 125

  • ரன்கள் - 10,122

  • சராசரி - 51.12

  • சதங்கள் - 34

யூனிஸ் கான்

  • ஆட்டங்கள் - 118

  • ரன்கள் - 10,099

  • சராசரி - 52.05

  • சதங்கள் - 34

ஸ்டீவ் ஸ்மித்

  • ஆட்டங்கள் - 115*

  • ரன்கள் - 10,000

  • சராசரி - 55.86

  • சதங்கள் - 34