சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி விளையாடவுள்ள ஆட்டங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
2024-25 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி நாளை (நவ.23) தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்கின்றன. இவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அணி இடம்பெற்றுள்ள பிரிவில் திரிபுரா, சிக்கிம், பரோடா, குஜராத், கர்நாடகம், சௌராஷ்டிரம், உத்தரகண்ட் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை திரிபுராவுடன் விளையாடவுள்ளது. தமிழக அணியை ஷாருக் கான் வழிநடத்தவுள்ளார். இந்நிலையில் தமிழக அணி விளையாடவுள்ள ஆட்டங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அணி மோதும் ஆட்டங்கள்
நவ. 23 - Vs திரிபுரா
நவ. 25 - Vs சிக்கிம்
நவ. 27- Vs பரோடா
நவ. 29 -Vs குஜராத்
டிச. 1- Vs கர்நாடகம்
டிச. 3- Vs சௌராஷ்டிரம்
டிச. 5 - Vs உத்தரகண்ட்
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணி
ஷாருக் கான் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால், பூபதி வைஷ்ண குமார், முஹமது அலி, துஷார் ரஹேஜா, ஜெகதீசன், பாபா இந்திரஜித், ரித்திக் ஈஷ்வரன், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, குர்ஜப்நீத் சிங், எம். முஹமது.