பி.வி. சிந்து @India_AllSports
விளையாட்டு

மகளிர் பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி. சிந்து தகுதி!

கடைசி லீக் ஆட்டத்தில் 21-5, 21-10 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்றார்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் பாட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 5-வது நாளான இன்று மகளிர் பாட்மிண்டனில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில், 21-5, 21-10 என்ற கேம் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பி.வி. சிந்து, கடந்த 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும், 2020 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

அதேபோல் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் தகுதிச் சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேல் 7-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.