ANI
விளையாட்டு

269 ரன்கள் அடித்து ஷுப்மன் கில் நிகழ்த்திய சாதனைகள்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமடித்த 5-வது பேட்டர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றார்.

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் குவித்து பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது இந்தியர்

  1. சுனில் காவஸ்கர் - 221 (தி ஓவல்)

  2. ராகுல் டிராவிட் - 217 (தி ஓவல்)

  3. ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)

இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய கேப்டன்

  • ஷுப்மன் கில் - 269

இந்திய கேப்டனாக முஹமது அசாருதீன் 179 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக இருந்தது.

இந்தியாவுக்கு வெளியே இந்திய பேட்டரின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர்

  1. விரேந்தர் சேவாக் - 309 (முல்தான்)

  2. ராகுல் டிராவிட் - 270 (ராவல்பிண்டி)

  3. ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)

ஆசியாவுக்கு வெளியே இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர்

  1. ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)

  2. சச்சின் டெண்டுல்கர் - 241* (சிட்னி)

இந்திய கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர்

  • ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)

  • விராட் கோலி - 254* (புனே)

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது வெளிநாட்டு வீரர்

  1. கிரேம் ஸ்மீத் - 277

  2. ஸாஹீர் அப்பாஸ் - 274

  3. ஷுப்மன் கில் - 269

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமடித்த 5-வது பேட்டர்

  • சச்சின் டெண்டுல்கர்

  • விரேந்தர் சேவாக்

  • ரோஹித் சர்மா

  • கிறிஸ் கெயில்

  • ஷுப்மன் கில்

இந்திய டெஸ்ட் பேட்டிங்கில் 4-வது இடம் என்பது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற மகத்தான வீரர்கள் விளையாடிய இடம். அந்த இடம் தற்போது பொருத்தமான வீரரையே தகவமைத்துக்கொண்டுள்ளது.