துப்பாக்கிச் சுடுதல்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி! 
விளையாட்டு

துப்பாக்கிச் சுடுதல்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி!

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

யோகேஷ் குமார்

துப்பாக்கிச் சுடுதல் ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற அனந்த் ஜீத் சிங் - மகேஷ்வரி சௌஹான் இணை 146 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி சீனாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது.