மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று (ஆக. 19) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கையில் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரை 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி பேட்டர் ஷெஃபாலி வர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. உலகக் கோப்பைக்குத் தேர்வான அதே அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.
ஒரே மாற்றம் - சயாலிக்குப் பதிலாக அமன்ஜோத் கெளர், உலகக் கோப்பையில் விளையாடுவார். காயத்திலிருந்து மீண்டு வரும் ரேணுகா சிங்கும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (து.கே.), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் (வி.கீ.), ரேணுகா தாக்குர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கெளட், அமன்ஜோத் கெளர், ராதா யாதவ், யாஸ்திகா பாட்டியா (வி.கீ.), ஸ்ரீ சரணி மற்றும் ஸ்னே ராணா.
மாற்று வீராங்கனைகள்: தேஜல் ஹஸாப்னிஸ், பிரேமா ராவத், பிரியா மிஸ்ரா, உமா சேத்ரி, மின்னு மணி மற்றும் சயாலி.