ANI
விளையாட்டு

இந்தியா, நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடர்கள் அட்டவணை

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது

கிழக்கு நியூஸ்

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணி அடுத்தாண்டு ஜனவரியில் இந்தியாவுக்குப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இரு அணிகளும் முதன்முறையாக இத்தொடரில் தான் மோதவுள்ளன. இத்தொடர்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, டி20 தொடர் நடைபெறுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள்: ஜனவரி 11, பரோடா

  • 2-வது ஒருநாள்: ஜனவரி 14, ராஜ்கோட்

  • 3-வது ஒருநாள்: ஜனவரி 18, இந்தூர்

டி20 தொடர்

  • முதல் டி20: ஜனவரி 21, நாக்பூர்

  • 2-வது டி20: ஜனவரி 23, ராய்பூர்

  • 3-வது டி20: ஜனவரி 25, குவஹாத்தி

  • 4-வது டி20: ஜனவரி 28, விசாகப்பட்டினம்

  • 5-வது டி20: ஜனவரி 31, திருவனந்தபுரம்