இந்திய யு-19 அணியில் டிராவிட் மகன்! 
விளையாட்டு

இந்திய யு-19 அணியில் டிராவிட் மகன்!

நடப்பு மகாராஜா கோப்பையில் 7 இன்னிங்ஸில் 82 ரன்கள் எடுத்துள்ளார் சமித் டிராவிட்.

யோகேஷ் குமார்

ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.

இவரது மகனான சமித் டிராவிட் நடப்பு மகாராஜா கோப்பையில் 7 இன்னிங்ஸில் 114 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 82 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக, 2023-24 கூச் பெஹார் போட்டியில் 8 ஆட்டங்களில் பங்கேற்று 362 ரன்கள் குவித்து 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சமித் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.

இந்திய யு-19 அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்டில் (4 நாள் ஆட்டம்) விளையாடவுள்ளது.