ANI
விளையாட்டு

கேஎல் ராகுலுக்கு வழிவிடுகிறாரா ரோஹித் சர்மா?

2-வது டெஸ்டுக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா, 5-ம் வரிசையில் களமிறங்கினார்.

யோகேஷ் குமார்

பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டில் கேஎல் ராகுலுக்கு வழிவிட்டு, ரோஹித் சர்மா நடுவரிசையில் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பெர்த் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் கலந்துகொள்ளாத கேப்டன் ரோஹித் சர்மா 2-வது டெஸ்டில் விளையாடவுள்ளார்.

பெர்த் டெஸ்டில் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க வீரராகக் களமிறங்கிய ராகுல், முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 77 ரன்களும் எடுத்தார். இரு இன்னிங்ஸிலும் ஆஸி. பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டது அவர் மட்டும்தான். இதனால் 2-வது டெஸ்டிலும் தொடக்க வீரராக அவர் தொடர்வாரா என்கிற கேள்வியும் விவாதமும் எழுந்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கு முன்னதாக கேன்பராவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஜெயிஸ்வால், ராகுல் தொடக்க வீரர்களாகவும் ரோஹித் சர்மா 4-வதாகவும் களமிறங்கினார்கள்.

இதனால் அடிலெய்ட் பகலிரவு டெஸ்டிலும் ராகுலை தொடக்க வீரராக அனுப்பிவிட்டு 3-வது அல்லது 5-வது இடத்தில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.