ANI
விளையாட்டு

தனிப்பட்ட உரையாடல்களை ஒளிபரப்புவதா?: கடுப்பான ரோஹித் சர்மா

கிழக்கு நியூஸ்

தனிப்பட்ட உரையாடல்களைப் பதிவு செய்வதும், ஒளிபரப்புவதும் தனியுரிமையை மீறும் செயல் என மும்பை இந்தியன்ஸ் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ரோஹித் பதிவிட்டுள்ளதாவது:

"கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு நகர்வும் கேமிராக்களில் பதிவு செய்யப்படுகிறது. ஆட்ட நாள்கள் அல்லது பயிற்சி நாள்களில் நண்பர்கள் மற்றும் சக வீரர்களுடனான உரையாடல்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் அசௌகரியமாகியுள்ளது.

என்னுடைய உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று சொல்லியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் அது பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்புவது தனியுரிமையை மீறும் செயலாகும். பிரத்யேகமானத் தகவலைச் சேகரிக்க வேண்டும் என்கிற தேவை, அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதில் மட்டுமே இருக்கும் கவனம் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையிலான நம்பகத்தன்மையை ஒரு நாள் நிச்சயம் முறிக்கும். நல்ல சிந்தனை மேலோங்கட்டும்" என்று ரோஹித் சர்மா தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவின் எந்த உரையாடல் ஒளிபரப்பப்பட்டது என்பது குறித்த தகவலில் தெளிவு கிடைக்கவில்லை.