ரிங்கு சிங் ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்

யோகேஷ் குமார்

நமது கையில் இல்லாத விஷயத்தைப் பற்றி அதிகமா யோசிக்கக் கூடாது என ரிங்கு சிங் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் மாற்று வீரராக தேர்வானார். 15 பேர் கொண்ட அணியில் இவர் இடம்பெறாதது பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஜாக்ரனுக்கு அளித்த பேட்டியில் ரிங்கு சிங்கிடம் டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வாகாதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரிங்கு சிங், “நன்றாக விளையாடிய பிறகும் உலகக் கோப்பையில் தேர்வாகவில்லை என்றால் யாராக இருந்தாலும் வருத்தப்படுவார்கள். ஆனால், அணியின் சமநிலை காரணமாக தான், நான் தேர்வு செய்யப்படவில்லை. நமது கையில் இல்லாத விஷயத்தைப் பற்றி அதிகமா யோசிக்கக் கூடாது. ஆரம்பத்தில் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், எது நடந்தாலும் அது நன்மைக்கே. ரோஹித், என்னை தொடர்ந்து கடுமையாக உழைக்கச் சொன்னார். இனி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை நடைபெறும், எனவே வருத்தப்பட வேண்டாம் என்றார்” எனக் கூறினார்.