காபா டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் காபாவில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சதமடித்தார்கள். இந்தியாவில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் நிறைய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
டெஸ்டில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்
ரிக்கி பாண்டிங் - 41
ஸ்டீவ் ஸ்மித் - 33
ஸ்டீப் வாக் - 32
மேத்யூ ஹேடன் - 30
இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்
ஸ்டீவ் ஸ்மித் - 10 சதங்கள் (41 இன்னிங்ஸ்)
ஜோ ரூட் - 10 சதங்கள் (55 இன்னிங்ஸ்)
கேரி சோபர்ஸ் - 8 சதங்கள் (30 இன்னிங்ஸ்)
விவ் ரிச்சர்ட்ஸ் - 8 சதங்கள் (41 இன்னிங்ஸ்)
ரிக்கி பாண்டிங் - 8 சதங்கள் (51 இன்னிங்ஸ்)
டெஸ்டில் சேனா நாடுகளில்* அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்
ஜஸ்பிரித் பும்ரா - 8
கபில் தேவ் - 7
ஜாகீர் கான் - 6
பி சந்திரசேகர் - 6
டெஸ்டில் ஆசியாவுக்கு வெளியே அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்
ஜஸ்பிரித் பும்ரா - 10
கபில் தேவ் - 9
டெஸ்டில் ஆஸ்திரேலியாவில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்
கபில் தேவ் - 5
அனில் கும்ப்ளே - 4
ஜஸ்பிரித் பும்ரா - 4
(*சேனா நாடுகள் - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா)