@TNCACricket
விளையாட்டு

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணியை சரிவில் இருந்து மீட்ட விஜய் சங்கர், சித்தார்த்!

விஜய் சங்கர் 76 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 94 ரன்களும் எடுத்தனர்.

யோகேஷ் குமார்

அசாமுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் முதல் நாளில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழ்நாடு - அசாம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குவஹாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற அசாம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தமிழ்நாடு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. லோகேஷ்வர் 8 ரன்களிலும், ஜெகதீஸன் 5 ரன்களிலும் வெளியேறினர்.

இதன் பிறகு விஜய் சங்கர் 76 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 94 ரன்களும் எடுத்து தமிழ்நாடு அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஷாருக் கான் 28 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 27 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.

முஹமது அலி 27 ரன்களும், சோனு யாதவ் 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.