விளையாட்டு

தில்லி அணியில் இணைந்த நோர்கியா: பலவீனம் சரி ஆகுமா?

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்கியா ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்கியா ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு (பிபிகேஎஸ்) எதிரான முதல் ஆட்டத்தில் தில்லி அணி தோற்றது. அந்த அணியின் 2-வது ஆட்டம் வரும் வியாழன் அன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 30 வயது நோர்கியா, அணியில் இணைந்ததை தில்லி கேபிடல்ஸ் உறுதி செய்துள்ளது.

முதல் ஆட்டத்தில் தில்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கலீல் அஹமது, மிட்செல் மார்ஷ், சுமித் குமார் ஆகியோர் மோசமாக வீசினார்கள். இஷாந்த் சர்மா நன்குப் பந்துவீசினாலும் காயம் காரணமாக அவரால் முழு ஓவர்களையும் வீச முடியாமல் போனது. சுழற்பந்து வீச்சாளர்களான அக்‌ஷர் படேலும் குல்தீப் யாதவும் திறமையை நன்குவெளிப்படுத்தினாலும் வேகப்பந்துவீச்சு, அணிக்குக் கைகொடுக்கவில்லை. இதனால் தற்போது, நோர்கியா அணியில் இணைந்திருப்பது அந்த அணியின் பலவீனத்தை விரைவில் சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.