பிரித்விராஜ் தொண்டைமான் @OfficialNRAI
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீரர்!

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 5 பேரும் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.

2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா சார்பாக எந்தெந்த வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய ஷாட்கன் அணிக்கு பிரித்விராஜ் தலைமை தாங்குவார் என்றும் அந்த அணியில் 5 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய அணி சார்பாக பிரித்விராஜ், ஆனந்த்ஜீத் சிங் (2023 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்), ரைஸா, மகேஷ்வரி சௌஹான் உட்பட 5 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

பிரித்விராஜ் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகனாவார்.