விளையாட்டு

ஐசிசி தலைவர் ஜெய் ஷா: பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ளார் ஜெய் ஷா .

யோகேஷ் குமார்

இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆல் ரவுண்டரான ஜெய் ஷா ஐசிசி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானார். இவர் டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். மேலும், மிக குறைந்த வயதில் ஐசிசியின் தலைவராக தேர்வாகி ஜெய் ஷா சாதனை படைத்தார்.

இந்நிலையில் ஜெய் ஷாவுக்கு கேலியான முறையில் பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜின் எக்ஸ் பதிவு:

“இந்திய கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த பேட்டர், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல் ரவுண்டர் போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வானதற்கு நாம் அனைவரும் கைத்தட்டி வாழ்த்துவோம்”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.