ANI
விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் குஜராத் நூலிழையில் இழந்த வீரர்கள்!

நூர் அஹமதை தேர்வு செய்ய குஜராத் அணி ஆர்டிஎம் முறையை பயன்படுத்தியும்..

யோகேஷ் குமார்

ஐபிஎல் போட்டியில் அறிமுகமான ஆண்டே கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் 7 வீரர்களை தவறவிட்டது.

வேகப்பந்து வீச்சாளர்களான மார்கோ யான்சென், யஷ் தாக்குர் மற்றும் விஜயகுமார் வைசாக் ஆகியோரை பஞ்சாப் அணியிடம் இழந்தது குஜராத். இந்த மூவருக்காக முறையே ரூ. 6.75 கோடி, ரூ. 1.5 கோடி, ரூ. 1.7 கோடி வரை முயற்சித்தும், அவர்களை எதிரணிகளிடம் தவறவிட்டது சன்ரைசர்ஸ்.

கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக 24 விக்கெட்டுகளை கைப்பற்றிய நூர் அஹமதை ரூ. 5 கோடிக்கு தேர்வு செய்தது சிஎஸ்கே. அவருக்காக குஜராத் அணி ஆர்டிஎம் முறையை பயன்படுத்த, ரூ. 10 கோடி வரை சென்றது சிஎஸ்கே. குஜராத் பின்வாங்கியது.

விஜய் சங்கர், குர்ஜப்நீத் சிங்குக்காக முறையே ரூ. 1.1 கோடி, ரூ. 2 கோடி வரை சென்று பார்த்தும் சிஎஸ்கேவிடம் கோட்டை விட்டது.

குஜராத் அணியில் கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றிய மோஹித் சர்மாவுக்காக ரூ. 2 கோடி வரை சென்று பார்த்தும் ரூ. 2.2 கோடிக்கு தில்லியிடம் இழந்தது.