பாரிஸ் ஒலிம்பிக் 
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்கின்றனர்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பாரிஸ் செல்லும் இந்திய அணி வீரர்களின் விவரம் வெளியானது.

70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் 72 வீரர்கள் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்கின்றனர்.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக மொத்தம் 122 பேர், 18 விளையாட்டில் பங்கேற்றனர்.

தமிழக வீரர்கள் விவரம்:

பிரித்விராஜ் தொண்டைமான் - (துப்பாக்கிச் சுடுதல்)

பிரவீன் சித்ரவேல் - (டிரிபிள் ஜம்ப்)

சந்தோஷ், ராஜேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் - (4*400 மீட்டர் பிரிவு)

சரத்கமல், சத்யன் - (டேபிள் டென்னிஸ்)

ஸ்ரீராம் பாலாஜி - (டென்னிஸ்)

விஷ்ணு சரவணன், நேத்ரா - (படகு போட்டி)

ஜெஸ்வின் ஆல்ட்ரின் - (நீளம் தாண்டுதல்)

வீரர்கள் மற்றும் விளையாட்டு விவரம்:

வில்வித்தை- 6

தடகளம்- 29

பேட்மிண்டன்- 7

குத்துச்சண்டை- 6

குதிரையேற்றம்- 1

கோல்ஃப்- 4

ஹாக்கி- 19

ஜூடோ- 1

துடுப்புப் படகு பிரிவு- 1

படகுப்போட்டி- 2

துப்பாக்கிச் சுடுதல்- 21

நீச்சல்- 2

டேபிள் டென்னிஸ்- 8

டென்னிஸ் - 3

மல்யுத்தம்- 6

பளுதுாக்குதல்- 1