மாரியப்பன் தங்கவேலு 
விளையாட்டு

உயரம் தாண்டுதலில் வெண்கலம்: வரலாற்றுச் சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலு!

தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

யோகேஷ் குமார்

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று, தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான டி63 உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பாக தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 1.88 மீ. உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

ஏற்கெனவே 2016 பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கமும், 2020 பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் வென்ற மாரியப்பன் தங்கவேலு இம்முறை வென்கலப் பதக்கம் வென்று தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.