பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம் @Paralympics
விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்: இந்தியா சார்பில் 84 வீரர்கள் பங்கேற்பு!

டோக்கியோ பாரலிம்பிக்ஸில் இந்தியா 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது.

யோகேஷ் குமார்

மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

2024 பாராலிம்பிக் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 28) தொடங்கி செப்டம்பர் 8 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.

இதில், மொத்தம் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா சார்பாக 12 வகையிலான விளையாட்டுகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

முன்னதாக டோக்கியோ பாரலிம்பிக்ஸில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது.