ANI
விளையாட்டு

7 தங்கம் உட்பட 29 பதக்கங்களுடன் பாராலிம்பிக்ஸை நிறைவுசெய்யும் இந்தியா!

2020 பாராலிம்பிக்ஸில் இந்தியா 19 பதக்கங்களை வென்றது.

யோகேஷ் குமார்

பாரிஸ் பாராலிம்பிக்ஸை 29 பதக்கங்களுடன் இந்தியா நிறைவுசெய்யவுள்ளது.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் பாராலிம்பிக்ஸ் இன்று நிறைவடையவுள்ள நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்ற பாராலிம்பிக்ஸ் போட்டியாக இது அமைந்துள்ளது.

முன்னதாக, 2020 பாராலிம்பிக்ஸில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் அந்த சாதனையை இந்த பாராலிம்பிக்ஸில் முறியடித்தது இந்தியா.

பாராலிம்பிக்ஸின் நிறைவு விழா இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.