விளையாட்டு

ஒரே நாளில் 5 பதக்கங்கள்: பாராலிம்பிக்ஸில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா!

இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்ற பாராலிம்பிக்ஸ் போட்டியாக இது அமைந்துள்ளது.

யோகேஷ் குமார்

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இதுவரை 20 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்தியா.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த பாராலிம்பிக்ஸில் இதுவரை 20 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்ற பாராலிம்பிக்ஸ் போட்டியாக இது அமைந்துள்ளது.

முன்னதாக, 2020 பாராலிம்பிக்ஸில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது.

தற்போது பாராலிம்பிக்ஸ் நிறைவடைய இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

நேற்று (செப். 3) இந்தியாவுக்கு 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்தன.

செப். 3-ல் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் விவரம்

* ஆடவருக்கான டி63 உயரம் தாண்டுதலில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம்

* ஆடவருக்கான டி63 உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம்

* ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம்

* ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் சுந்தர் சிங் வெண்கலப் பதக்கம்

* 400 மீ. டி20 ஓட்டப்பந்தயத்தில் தீப்தி வெண்கலப் பதக்கம்