பாராலிம்பிக்ஸ் ANI
விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை!

இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

யோகேஷ் குமார்

பாராலிம்பிக்ஸ் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் எஸ்ஹெச் 6 பிரிவின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ 21-14, 21-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

அதேபோல் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமார் - ஷீத்தல் தேவி ஜோடி 156-155 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது.