பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5-வது பதக்கம்! 
விளையாட்டு

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5-வது பதக்கம்!

துப்பாக்கிச் சுடுதலில் ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதகத்தை வென்றுள்ளார்.

யோகேஷ் குமார்

பாராலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனையான ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதகத்தை வென்றுள்ளார்.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

நேற்று (ஆகஸ்ட் 30) ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்தது.

பதக்கங்களின் விவரம்

அவானி லேகரா - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம்.

மோனா அகர்வால் - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம்.

பிரீத்தி பால் - மகளிர் 100 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலம்.

மணீஷ் நர்வால் - துப்பாக்கிச் சுடுதலில்10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் வெள்ளி.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதகத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு இதுவரை 5 பதக்கங்கள் கிடைத்துள்ளது.