விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்

கிழக்கு நியூஸ்

ஒலிம்பிக்ஸ் ஜாம்பவான் உசைன் போல்ட் டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதைப் பிரபலப்படுத்தும் வகையில், ஒலிம்பிக்ஸ் ஜாம்பவான் உசைன் போல்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான பாடல் விடியோவில் உசைன் போல்ட் இடம்பெறவுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஆட்டங்களில் இவர் கலந்துகொள்ளவுள்ளார். உலகக் கோப்பை தொடர்பாக அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று உலகக் கோப்பையை அவர் பிரபலப்படுத்தவுள்ளார்.

கிரிக்கெட்டை உலகம் முழுக்கக் கொண்டு செல்வதற்கான தனது பங்களிப்பை எதிர்நோக்கியிருப்பதாக உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

உசைன் போல்ட் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.