துப்பாக்கிச் சுடுதல் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! @TheKhelIndia
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச் சுடுதல் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை!

44 பேர் கலந்துகொண்ட இந்த சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்தார் மனு பாக்கர்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

44 பேர் கலந்துகொண்ட இந்த சுற்றில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய மனு பாக்கர் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான ரிதம் சங்வான் புள்ளிகள் பட்டியலில் 15-வது இடத்தைப் பிடித்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.