வில்வித்தை தகுதி சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்த இந்திய ஆடவர் அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
2024 ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா சார்பாக 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் வில்வித்தையின் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
இதில், மகளிருக்கான தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய ஆடவர் அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
தீரஜ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இணைந்து 2013 புள்ளிகளைப் பெற்றனர்.
தனிநபர் தரவரிசையில் தீரஜ் 4-வது இடத்தையும், தருண்தீப் 14-வது இடத்தையும், பிரவீன் ஜாதவ் 39-வது இடத்தையும் பிடித்தனர்.