லக்‌ஷயா சென் ANI
விளையாட்டு

ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு: காலிறுதியில் இந்திய வீரர்!

21-12, 21-6 என்ற கேம் கணக்கில் பிரணாயை வீழ்த்தியுள்ளார்.

யோகேஷ் குமார்

ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு லக்‌ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 6-வது நாளான இன்று ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய வீரர்களான லக்‌ஷயா சென் - பிரணாய் ஆகியோர் மோதினர்.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய லக்‌ஷயா சென் 21-12, 21-6 என்ற கேம் கணக்கில் பிரணாயை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.