வில்வித்தை காலிறுதியில் இந்திய மகளிர் அணி! @India_AllSports
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தை காலிறுதியில் இந்திய மகளிர் அணி!

தகுதி சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

யோகேஷ் குமார்

வில்வித்தை தகுதி சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியா சார்பாக 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் வில்வித்தையின் தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

இதில், மகளிருக்கான தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மகளிர் அணியில் பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா ஆகியோரும் இடம் பெற்றனர்.

அங்கிதா 11-வது இடத்தையும், பஜன் கவுர் 22-வது இடத்தையும், தீபிகா குமாரி 23-வது இடத்தையும் பிடித்தனர்.