பாட்மிண்டன் காலிறுதியில் இந்திய ஆடவர் அணி! @chiragshetty
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: பாட்மிண்டன் காலிறுதியில் இந்திய ஆடவர் அணி!

இன்றைய இந்திய அணி ஆட்டம், எதிரணி வீரர்கள் பங்கேற்காத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் காலிறுதிக்கு ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் 3-வது நாளான இன்று பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இந்திய வீரர்களான ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஆகியோர் விளையாட வேண்டிய ஆட்டம் எதிரணி வீரர்கள் பங்கேற்காத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

இருப்பினும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.