ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
8-வது நாளான இன்று மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தீபிகா குமாரி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான பஜன் கவுரும் பங்கேற்றார். 5 சுற்றுகள் முடிவில் 5-5 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த பஜன் கவுர் ஷூட் ஆஃபில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
காலிறுதி சுற்று இன்று மாலை 5.15 மணிக்கு தொடங்குகிறது.