ஜெய் ஷா  
விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ நிதியுதவி: ஜெய் ஷா அறிவிப்பு

யோகேஷ் குமார்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.

இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் 72 வீரர்கள் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவாக இருப்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்” என்றார்.