ஃபிளெமிங் ANI
விளையாட்டு

ஒரு சில இடங்களில் நாங்கள் இன்னும் தடுமாறுகிறோம்: ஃபிளெமிங்

யோகேஷ் குமார்

ஒரு சில இடங்களில் சிஎஸ்கே அணி இன்னும் தடுமாறுவதாக தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் லக்னௌ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. இந்நிலையில், “விரைவான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை” என சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் பேசியுள்ளார்.

ஃபிளெமிங் பேசியதாவது:

“வித்தியாசமான கூட்டணியை அமைத்து முயற்சிக்க வேண்டும் என்பதால் மிட்செல்லை முன்கூட்டியே அனுப்பினோம். ஒரு சில இடங்களில் நாங்கள் இன்னும் தடுமாறுகிறோம். ஆனால், விரைவான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை. காயத்தால் சில வீரர்கள் அவதிப்பட்டனர். இன்னுமும் நிலையற்ற சூழலில் இருப்பது கவலை அளிக்கிறது. அணியில் பல மாற்றங்களை செய்தோம். அதற்கு வீரர்களின் ஃபார்மும் ஒரு காரணம். மிட்செல் முன்வரிசையில் களமிறங்கி சர்வதேச அளவில் நிறைய ரன்களை குவித்துள்ளார். எனவே கீழ் வரிசையில் அவரை விளையாட வைப்பது சரியில்லை என நினைத்தோம். முதல் மூன்று பேட்டர்கள் நிறைய ரன்களை குவிக்க வேண்டும். அதை ருதுராஜ் சிறப்பாக செய்தார். ஆடுகளம் பெரியளவில் உதவவில்லை. முன்னதாக சுழல் நன்றாக எடுபட்டது, ஆட்டங்களை எளிதில் வென்றோம். ஆனால், சொந்த மண்ணில் வெற்றி பெற சரியான அணியைத் தேர்வு செய்வது அவசியம். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றார்.

சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் வருகிற 28 அன்று சேப்பாக்கத்தில் விளையாடவுள்ளது.