விளையாட்டு

செல்ஃபிக்கு சிரித்ததால் வட கொரிய வீரர்கள் மீது நடவடிக்கை?

யோகேஷ் குமார்

தென் கொரிய வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காரணத்திற்காக வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வட கொரிய வீரர்களான ரி ஜாங் மற்றும் கிம் கும் யாங் பதக்கம் வென்ற பிறகு மற்ற வீரர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதில் தங்கப் பதக்கத்தை வென்ற சீன வீரர்கள் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்ற தென் கொரிய வீரர்களுடன் இணைந்து சிரித்தப்படி செல்ஃபி எடுத்துக்கொண்டதால் வட கொரிய வீரர்கள் மீது அந்நாட்டு அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவும், வட கொரியாவும் பரம எதிரி நாடுகளாக இருக்கும் பட்சத்தில் எதிரி நாட்டு வீரர்களுடன் இணைந்து சிரித்தப்படி செல்ஃபி எடுத்துக்கொண்டதால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வட கொரிய வீரர்கள், மற்ற நாட்டு வீரர்களுடன் குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.