ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிரஞ்சனா நாகராஜன் @niranjananagarajan
விளையாட்டு

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிரஞ்சனா நாகராஜன்

அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

யோகேஷ் குமார்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணிக்காக 2008-ல் அறிமுகமான நிரஞ்சனா, இதுவரை 2 டெஸ்ட், 22 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களில் விளையாடி, முறையே 4, 24, 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். கடைசியாக 2016-ல் இந்திய அணிக்காக விளையாடினார்.

2008 முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய நிரஞ்சனா தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். மேலும், தனியார் நிறுவனம் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நிரஞ்சனா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்த உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.