படம்: https://x.com/MINYCricket
விளையாட்டு

எம்ஐ நியூயார்க் கேப்டன் ஆனார் நிகோலஸ் பூரன்!

கிளென் மேக்ஸ்வெல் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிகோலஸ் பூரன், எம்எல்சி கிரிக்கெட்டில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிகோலஸ் பூரன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நீண்ட உறவு இருக்கிறது. 2017 ஐபிஎல் போட்டிக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியால் பூரன் தேர்வு செய்யப்பட்டார். ஐஎல்டி20யில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார். எம்எல்சி போட்டியில் கடந்த 2023-ல் எம்ஐ நியூயார்க் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த அணி முதன்முறையாக எம்எல்சி போட்டியில் சாம்பியன் ஆனபோது, இறுதிச் சுற்றில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 137 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதன் மூலம், எம்எல்சி போட்டியில் எம்ஐ நியூயார்க் கேப்டன் எனும் கூடுதல் பொறுப்பு பூரனைத் தேடி வந்துள்ளது.

இதேபோல ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய ஆல்-ரௌண்டர் கிளென் மேக்ஸ்வெல் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.