விளையாட்டு

தோனி, ரோஹித், கோலியை கடுமையாக சாடிய சாம்சனின் தந்தை!

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கடந்த 9 ஆண்டுகளில் 36 டி20 மற்றும் 16 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

யோகேஷ் குமார்

தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தனது மகனின் 10 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச டி20-யில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த 4-வது வீரர் மற்றும் முதல் இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார் சஞ்சு சாம்சன்.

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கடந்த 9 ஆண்டுகளில் 36 டி20 மற்றும் 16 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியில் தன்னை நிரூபித்தாலும், சர்வதேச அளவில் அவருக்கு வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ரசிகர்களும் அவ்வப்போது இணையத்தில் சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்.

இந்நிலையில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தனது மகனின் 10 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

சாம்சனின் தந்தை விஸ்வநாத் சாம்சன் மீடியா ஒன் சேனலுக்கு அளித்த பேட்டியில், “தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் என் மகனின் 10 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை வீணடித்தனர். ஓவ்வொரு முறை சாம்சனை காயப்படுத்தினாலும், அந்த நெருக்கடியில் இருந்து வலிமையுடன் மீண்டு வந்தார். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், வங்கதேசத்துக்கு எதிராக சாம்சன் சதமடித்ததை விமர்சித்தார். அது என்னை மிகவும் பாதித்தது. சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரிடம் இருக்கும் கிளாசிகல் டச் சாம்சனிடமும் உள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.