மாண்டோ டுபிளான்டிஸ் @Olympics
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: போல் வால்டில் உலக சாதனை படைத்த ஸ்வீடன் வீரர்!

தனது முந்தைய சாதனைகளைத் தானே முறியடித்துள்ளார்.

யோகேஷ் குமார்

ஒலிம்பிக்ஸ் போல் வால்ட் விளையாட்டில் ஸ்வீடன் வீரர் மாண்டோ டுபிளான்டிஸ் 6.25 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில், 10-வது நாளான நேற்று போல் வால்டில் ஸ்வீடன் வீரர் மாண்டோ டுபிளான்டிஸ் 6.25 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரலில் சீனாவில் நடைபெற்ற டைமண்ட் லீகில் 6.24 மீ. உயரம் தாண்டி உலக சாதனை படைத்தார் மாண்டோ டுபிளான்டிஸ்.

இந்நிலையில் 6.25 மீ. உயரம் தாண்டி தனது முந்தைய சாதனையை முறியடித்து மாண்டோ டுபிளான்டிஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

மாண்டோவுக்கு உலக சாதனை படைப்பது ஒன்றும் புதிதல்ல, நேற்றைய ஆட்டத்துடன் இதுவரை 9-வது முறையாக முந்தைய சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.