மனு பாக்கர் 
விளையாட்டு

எங்கு சென்றாலும் பெருமையுடன் பதக்கங்களை காட்டுவேன்: விமர்சனங்களுக்கு மனு பாக்கர் பதிலடி!

ஒரே ஒலிம்பிக்ஸில் இரு பதங்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் மனு பாக்கர்.

யோகேஷ் குமார்

எங்கு சென்றாலும் பதக்கங்களைக் காட்டிக் கொண்டிருப்பதாக தன்னை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மனு பாக்கர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவிலும், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்ஸில் இரு பதங்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார் மனு பாக்கர்.

இந்நிலையில் மனு பாக்கர் எங்கு சென்றாலும் பதக்கங்களைக் காட்டிக் கொண்டிருப்பதாக ஒரு சிலர் அவரை விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனு பாக்கர் தனது எக்ஸ் தளத்தில், “பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நான் வென்ற இரண்டு பதக்கங்களும் இந்தியாவுக்குச் சொந்தமானது. எனவே எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களை காட்ட சொன்னாலும், அதனை பெருமையுடன் காட்டுவேன். எனது பயணத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள இதுதான் வழி” என்று பதிவிட்டுள்ளார்.