இறுதிச் சுற்றில் மனு பாக்கர்! 
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச் சுடுதல் இறுதிச் சுற்றில் மனு பாக்கர்!

தனது 3-வது பதக்கத்தை வெல்வாரா? மனு பாக்கர்.

யோகேஷ் குமார்

மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு மனு பாக்கர் தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இன்று நடைபெற்ற மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 2-வது இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

மேலும், ஒரே ஒலிம்பிக்ஸில் இரு பதங்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் மனு பாக்கர்.

இந்நிலையில் தனது 3-வது பதக்கத்தை அவர் வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.