விளையாட்டு

மஹா கும்பமேளா: பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் சாய்னா நேவால்

புதன்கிழமை காலை 8 மணி வரை திரிவேணி சங்கமத்தில் 37.48 லட்சம் பேர் புனித நீராடியுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

மஹா கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் புனித நீராடுகிறார்.

திரிவேணி சங்கமத்துக்கு வந்த அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

"திரிவேணி சங்கமத்துக்கு வந்துள்ளோம். மிகப் பெரிய திருவிழாவாகத் தெரிகிறது. நல்வாய்ப்பாக நான் இங்குள்ளேன். இந்த இடத்தில் எம்மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன். மக்கள் மகிழ்வுடன் இருப்பதையும் கடவுள் மீது இந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதையும் பார்க்க நன்றாக இருக்கிறது.

உத்தரப் பிரதேச அரசுக்குப் பாராட்டுகள். அவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். தங்குமிடங்களை அற்புதமாக அமைத்துள்ளார்கள். சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். தந்தையுடன் வந்துள்ளேன். உலகில் வேறெங்கு இதுபோன்ற ஓர் ஆன்மிகத் திருவிழாவைப் பார்க்க முடியும்? ஒட்டுமொத்த உலகிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். இது பெரிய விஷயம்" என்றார் சாய்னா நேவால்.

புதன்கிழமை காலை 8 மணி வரை திரிவேணி சங்கமத்தில் 37.48 லட்சம் பேர் புனித நீராடியுள்ளார்கள்.