கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம்
கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம் ANI
விளையாட்டு

விதிமீறல்: கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம்

யோகேஷ் குமார்

ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக ஹர்ஷித் ராணாவிற்கு ஆட்டத்தின் கட்டணத்திலிருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரை ஹர்ஷித் ராணா அட்டகாசமாக வீச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ராணா மயங்க் அகர்வாலை நோக்கி கைகளால் முத்தம் தருவதுபோல சைகை காட்டி, அவரை முறைத்தும் பார்த்தார்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக ஹர்ஷித் ராணாவிற்கு ஆட்டத்தின் கட்டணத்திலிருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விதிமீறல்களை செய்ததாக போட்டி நடுவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹர்ஷித் ராணாவும் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் 60 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.