ஜோ ரூட் ANI
விளையாட்டு

டெஸ்டில் அதிக ரன்கள்: ஜோ ரூட் சாதனை!

இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

யோகேஷ் குமார்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முல்தானில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151 ரன்கள் அடித்தார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தனது 35-வது சதத்தை நிறைவு செய்த ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். மேலும், டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சுனில் காவஸ்கரை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் குக் 12472 ரன்களுடன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த ரன்களைக் கடந்து இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் பெருமையை பெற்றார் ரூட்.

சர்வதேச அளவில் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது 5-வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்பாக சச்சின் (15921 ரன்கள்), பாண்டிங் (13378 ரன்கள்), காலிஸ் (13289 ரன்கள்), டிராவிட் (13288 ரன்கள்) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.

இவை அனைத்துக்கும் மேலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் குறிப்பிட்ட ஆண்டுகளில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.