ஜெயவர்தனே 
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அறிவிப்பு!

ஏற்கெனவே, 2017 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனே செயல்பட்டார்.

யோகேஷ் குமார்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025-2027 பருவத்துக்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ கடந்த செப். 29 அன்று வெளியிட்டது. இதில், தக்கவைத்தல், ஆர்டிஎம் முறைகளில் ஓர் அணி அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களையும் (உள்நாடு & வெளிநாடு), அதிகபட்சமாக இரு சர்வதேச அனுபவம் இல்லா வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, 2017 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனே செயல்பட்டார். இதன் பிறகு 2022-ல் மும்பை அணியின் உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களின் தலைவராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, 2023, 2024 ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பௌச்சர் செயல்பட்டார். 2023-ல் பிளே ஆஃப் வரை சென்ற மும்பை அணி, கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது.