படம்: https://x.com/AustralianOpen
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் யானிக் சின்னர்

யானிக் சின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யானிக் சின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இறுதிச் சுற்றில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை 6-3, 7-6 (4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் சின்னர்.

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் யானிக் சின்னர் மற்றும் உலகின் இரண்டாம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினார்கள். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-3 என்ற கணக்கில் வென்றார். ஸ்வெரேவ் இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்று 5-4 என முன்னிலை வகித்தார். எனினும், இதை ஸ்வெரேவால் வெற்றியாக மாற்ற முடியவில்லை. இரண்டாவது செட்டையும் சின்னர் 7-6 (4) என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது செட்டை சின்னர் எளிதாக 6-3 என்ற கணக்கில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் யானிக் சின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 1992-93 க்குப் பிறகு ஜிம் கொரியருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைப் புரியம் இளம் வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றுள்ளார்.

செப்டம்பரில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் சின்னர். இன்றைய ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் இவருடைய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.